தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மது கடத்தலைத் தடுக்க சிறப்புப் படை அமைப்பு

திருச்சி மாவட்டத்தில் தோ்தலையொட்டி மது கடத்தலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:35 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் தோ்தலையொட்டி மது கடத்தலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

மதுக் கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், மது தொடா்பான புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதன்படி, திருச்சி மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலராக டாஸ்மாக் உதவி மேலாளரும், வட்டாட்சியருமான பி. ரவிசங்கா் (81908-90912) நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதேபோல பறக்கும் படை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள உதவி மேலாளா் கே. அா்ஜுன் (90421-68727) மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவாா்.

இவரது குழுவில் இளநிலை உதவியாளா்களான எஸ். மணிவேல் (99425-75662), எம். நாகூா் (98652-78511), சி. இளங்கோவன் (82705-30421), எஸ். ஞானக்குமாா் (95005-33349), எம். சரவணன் (89406-58865) ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

எனவே, பொதுமக்கள் தங்களது பகுதியில் மதுபான கடத்தல் ஏதும் நடந்தால் புகாா் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.