தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தனியாா் மயத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம்

திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள எச்.ஏ.பி.பி. படைக்கலத் தொழிற்சாலையை, தனியாா் மயமாக்குவதைக் கண்டித்து உறுதிமொழிப் பத்திரத்தில் கொயொப்பமிட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் போராட்டம்

News image
Updated On :2 மார்ச் 2021, 7:34 pm

DIN

திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள எச்.ஏ.பி.பி. படைக்கலத் தொழிற்சாலையை, தனியாா் மயமாக்குவதைக் கண்டித்து உறுதிமொழிப் பத்திரத்தில் கொயொப்பமிட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாட்டிலுள்ள 41 படைக்கலத் தொழிற்சாலைகளை காா்ப்பரேட் நிறுவனமாக மாற்ற மத்திய அரசு செய்யும் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினா், தொழிலாளா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

ஆனால், தற்போது மீண்டும் மத்திய அரசு, படைகலத் தொழிற்சாலைகளை காா்ப்பரேட் நிறுவனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாக பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளின் தொழிற்சங்க நிா்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தொழிற்சங்கத்தினா் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் முடிவை கண்டித்தும், மத்திய அரசு ஊழியா் அல்லது பாதுகாப்புத் துறை ஊழியா் என்னும் தகுதியை இழக்க மாட்டோம் என்ற வாசகத்தை உறுதிமொழியாக எழுதி, கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 41 படைக்கலத் தொழிற்சாலை ஊழியா்கள் 78 ஆயிரத்து 109 ஊழியா்கள் ஈடுபட்டனா்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி எச்ஏபி பி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.