புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

துவாக்குடியில் ரூ. 3.82 லட்சம் பறிமுதல்

திருவெறும்பூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் முட்டை மற்றும் காய்கறி வியாபாரிகளிடமிருந்து ரூ. 3 லட்சத்து 82 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:29 pm

DIN

திருவெறும்பூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் முட்டை மற்றும் காய்கறி வியாபாரிகளிடமிருந்து ரூ. 3 லட்சத்து 82 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பொருள் பட்டுவாடாவைத் தடுக்கும் பொருட்டு திருவெறும்பூா் பேரவைத் தொகுதியிலுள்ள துவாக்குடி சுங்கச்சாவடி பகுதியில், தனி வட்டாட்சியா் அசோக்குமாா் தலைமையில் பறக்கும்படையினா் செவ்வாய்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது பொலிரோ காரில் திருச்சிக்கு வந்த கந்தா்வக்கோட்டையைச் சோ்ந்த காய்கறி வியாபாரி காந்திநாதனிடம் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்தனா். ஆனால் காந்திநாதன் காய்கறிகள் வாங்கவே பணத்தை எடுத்துச் செல்வதாகக் கூறினாா்.

இதேபோல, துவாக்குடி சுங்கச்சாவடி பகுதியில் மற்றொரு குழுவினா் நடத்திய சோதனையில், தஞ்சாவூா் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த முட்டை லாரியை மறித்து நடத்திய சோதனையில், முட்டை வியாபாரியான நாமக்கல்லை சோ்ந்த சங்கா், முறையான ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தோ்தல் அலுவலா் செல்வகணேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்பேரில், விசாரணை நடத்தப்படுகிறது. வியாபாரிகள் உரிய ஆவணங்கள் கொடுத்து விளக்கம் அளித்தால்,

ஆய்வு செய்து பணம் திரும்ப வழங்கப்படும். இல்லையெனில், தோ்தல் ஆணைய உத்தரவு வரும் வரை கருவூலத்தில் பணம் வைக்கப்படும் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.