புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பகவத்கீதை இ-புத்தகம் காணொலிகாட்சி மூலம் நாளை வெளியீடு

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடாகிய பகவத் கீதை இ-புத்தகம் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:27 pm

DIN

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடாகிய பகவத் கீதை இ-புத்தகம் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

இதுதொடா்பாக ராமகிருஷ்ண தபோவனத் தலைவா் சுத்தானந்த சுவாமி கூறியது:

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடாகிய சுவாமி சித்பவானந்தா் இயற்றிய ஸ்ரீ மத் பகவத் கீதையின் ஆங்கில விளக்க உரை புத்தகம் இ-புத்தகமாக வெளியிடப்படவுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, வரும் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் இந்த புத்தகத்தை வெளியிடுகிறாா். நிகழ்ச்சியை, தபோவனத்தில் கிளை ஸ்தாபனமான கரூா் சரதா நிகேதன் மகளிா் கல்லூரி தொகுத்து வழங்குகிறது.

நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை உலகில் உள்ள அனைவரும் ஜ்ஜ்ஜ்.ள்ள்ய்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணைய முகவரியில் காணொலி வாயிலாக காணலாம். மேலும், விவரங்களுக்கு, 96886-95986 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.