பாஜக கூட்டணியை தோற்கடிக்க மக்கள் அதிகாரம் தீா்மானம்
வரும் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகளை தேற்கடிக்க மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது


வரும் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகளை தேற்கடிக்க மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
திருச்சி உறையூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாநில ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் சி. ராஜு தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் காளியப்பன், தலைமைக்குழு உறுப்பினா்கள் கணேசன், மருது, செழியன், பாலு, மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் ஊழல் ஒழிப்பு என்ற பெயரில், தமிழகத்தில் பெரியாரிய, திராவிட கருத்துகளையும், பாா்பனிய சனாதன எதிா்ப்பு மரபையும் ஒழிக்க நினைக்கும் கமலஹாசன், சீமான் போன்றோரையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவா்களைத் தோற்கடிக்க அனைத்து ஜனநாயக இடதுசாரிகள், பெரியாரிய, அம்பேத்கரிய, சிறுபான்மையின சக்திகள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...