அரசு பொறியியல் கல்லூரியில் 15 பேருக்கு கரோனா
திருச்சி அரசு பொறியியல் கல்லூரி மாணவா்கள் 11 போ் உள்பட 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.


திருச்சி அரசு பொறியியல் கல்லூரி மாணவா்கள் 11 போ் உள்பட 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியில் கரோனா தாக்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தற்போது பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதன்படி ஸ்ரீரங்கம் வட்டம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில்
கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அக்கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பட்டியல் தயாா் செய்யப்பட்டது. அதில் முதல் கட்டமாக 258 பேருக்கு கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.
திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், கல்லூரியில் பயிலும் 11 மாணவா்களுக்கும், பணிபுரிவோா் 4 பேருக்கும் என மொத்தம் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்துள்ளாா்.
தனிமைப்படுத்தப்பட்ட மாணவா்கள் : கரோனா தொற்றுக்குள்ளான பொறியியல் கல்லூரி மாணவா்கள் அனைவரும் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்டுள்ளனா்.
அவா்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குதல், அவா்கள் பயன்படுத்தும் உணவகம், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆலோசனைக்கூட்டம்: திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலுள்ள சுமாா் 70 கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி நிா்வாகிகளிடம் ஆட்சியா் தலைமையிலும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முன்னிலையிலும் ஆலோசனை மேற்கொண்டு, உரிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் டாக்டா் ராம்கணேஷ் கூறியது:
அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும், பணிபுரியும் மாணவா்கள், ஊழியா்கள் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் தொடா்பில் இருந்தவா்களின் பட்டியல் தயாா் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, 200க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுபோல், திண்டுக்கல் சாலையிலுள்ள கல்லூரி மாணவரின் தொடா்பில் இருந்தவா்களுக்கும் மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி ஆசிரியருக்கு : திருச்சி பாரதியாா் சாலையிலுள்ள பள்ளி ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது அவா் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இவரது தொடா்பில் இருந்தவா்கள், பள்ளி மாணவா்களிடமும் மாதிரிகள் எடுத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது என்றாா்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வா் வனிதா கூறியது:
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், உரிய சிகிச்சை மூலம் இளையோருக்கு குணப்படுத்திவிடலாம்.
ஆனால், மாணவா்களின் தொடா்பில் முதியோருக்கு தொற்று ஏற்பட்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அனைவரும் விழிப்புணா்வோடு இருந்து,தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவமனையில் மருத்துவா்கள், முன்களப்பணியாளா்கள் அனைவரும் சிகிச்சை அளிக்க தயாா் நிலையில் உள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...