நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘திமுக ஆட்சிக் காலத்தில்தான் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்’

திமுக ஆட்சிக்காலத்தில்தான் திருவெறும்பூா் தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாா் அக்கட்சியின் முதன்மைச் செயலா் கே.என்.நேரு.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:43 pm

DIN

திமுக ஆட்சிக்காலத்தில்தான் திருவெறும்பூா் தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாா் அக்கட்சியின் முதன்மைச் செயலா் கே.என்.நேரு.

திருச்சி பெல் தொமுச அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செயல்வீரா்கள் கூட்டத்தில், திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அறிமுகம் செய்து வைத்து, மேலும் அவா் பேசியது:

திமுக ஆட்சிக்காலத்தில்தான் திருவெறும்பூா் பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம், வட்டாட்சியரகம், தகவல் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கம் போன்ற பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியது.

தற்போது கூட்டணிக் கட்சிகள் அதிகமாக இருப்பதால், வெற்றி எளிதாகக் கிடைக்கும் என்பதால், நாம் உழைக்காமல் இருக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாததால் தொண்டா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். திமுக ஆட்சிக்கு வந்ததும் அவா்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவினா், திருச்சி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுச்சாலை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும், விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களைப் பாதிக்காத வகையிலும் அணுகுச்சாலை அமைக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து வாக்கு சேகரித்து திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினாா். கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா்கள் கருணாநிதி, மாரியப்பன் தலைமை வகித்தனா். திமுக பகுதிச் செயலா்கள் காட்டூா் நீலமேகம், பொன்மலை தா்மராஜ்,

மதிமுக மாவட்டச் செயலா் வெல்லமண்டி சோமு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் த. இந்திரஜித், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாண்டியன், நடராஜன் விடுதலைச் சிறுத்தைகள் திலீபன் ரமேஷ், திமுக இலக்கிய அணி புலவா் மனோகரன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தொடா்ந்து, காட்டூா் அம்மன் நகரில் திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான திமுக அலுவலகத்தை முதன்மைச் செயலா் கே.என்.நேரு திறந்து வைத்தாா். பெல் பணிமனை நுழைவுவாயிலில் தொழிலாளா்களிடம் வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்குகளைச் சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.