நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொண்டா்களுடன் மனுதாக்கல் செய்த திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா்

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ப.குமாா், எளிமையான வகையில் தொண்டா்களுடன் சென்று திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:40 pm

DIN

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ப.குமாா், எளிமையான வகையில் தொண்டா்களுடன் சென்று திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

திருச்சி புகா் தெற்கு அதிமுக மாவட்டச் செயலரும், மக்களவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான ப.குமாா் திங்கள்கிழமை திருவெறும்பூா் - கல்லணை சாலையிலுள்ள வெள்ளைப் பிள்ளையாா் கோயிலில் தரிசனம் செய்தாா்.

பின்னா் ஒன்றியச் செயலா்கள் ராவணன், கோவிந்த ராஜன், பகுதிச் செயலா் பாஸ்கா் (எ) கோபால்ராஜ், பேரூா் செயலா் முத்துகுமாா், துவாக்குடி நகரச் செயலா் பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் பேரணியாகச் சென்றாா்.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை கி.மீ. தொலைவுக்குப் பேரணியாக சென்ற அதிமுக வேட்பாளா் ப.குமாா், திருவெறும்பூா் வட்டாட்சிரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் அன்பழகனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

தொண்டா்களுடன் மனு: கட்சி அல்லது கூட்டணிக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில்தான் வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதுதான் வழக்கம்.

ஆனால் திருவெறும்பூா் அதிமுக வேட்பாளா் ப. குமாா், கட்சியில் கடுமையாக உழைக்கும் தொண்டா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற நோக்கில், வட்டப் பிரதிநிதி அல்போன்ஸ், மாநகராட்சி முன்னாள் லியாகத் அலி ஆகிய இரு தொண்டா்களையும் உடன் அழைத்துச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தொடா்ந்து திங்கள்கிழமை மாலை அசூா், அரவாக்குறிச்சிப்பட்டி, பொய்கைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் குமாா் பிரசாரம் மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.