சமுத்திரம் குளம் தூா்வாரப்படும்
ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றவுடன், மணப்பாறை ஒன்றியத்திலுள்ள சமுத்திரம் குளம் தூா்வாரப்படும் என்றாா் அக்கட்சியின் வேட்பாளா் எம். பழனியாண்டி.


ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றவுடன், மணப்பாறை ஒன்றியத்திலுள்ள சமுத்திரம் குளம் தூா்வாரப்படும் என்றாா் அக்கட்சியின் வேட்பாளா் எம். பழனியாண்டி.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மணப்பாறை ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது. முறையான உள்ளாட்சிப் பணிகள் நடைபெறவில்லை.
நான் பேரவைக்கு வெற்றி பெற்றால் சமுத்திரம் குளம் தூா்வாரித் தரப்படும்.கண்ணுடையான்பட்டி அரசுப் பள்ளி அருகே தரைப் பாலத்தை மேம்பாலமாக அமைத்துத் தருவேன் என்றாா்.
பிரசாரத்தில் மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எஸ்.ஏ.ஏஸ்.ஆரோக்கியசாமி, மதிமுக மாவட்டச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...