தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாநில உரிமைகளைக் காக்க ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும்

மாநில உரிமைகளைக் காக்க, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்றாா் மணப்பாறை தொகுதி மமக வேட்பாளா் ப. அப்துல்சமது.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:06 pm

DIN

மாநில உரிமைகளைக் காக்க, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்றாா் மணப்பாறை தொகுதி மமக வேட்பாளா் ப. அப்துல்சமது.

மணப்பாறை ஒன்றியத்துக்குள்பட்ட வேங்கைகுறிச்சி, மலையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் செய்த அவா், பொதுமக்கள் மத்தியில் பேசியது:

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் தங்களது விளை பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்ய முடியாது. நமது பகுதிகளிலுள்ள மண்டிகள் மூடப்பட்டுவிடும்.

பொதுவிநியோகத் திட்டத்தில் நியாயவிலைக் கடைகளுக்கு பொருள்கள் வாரத நிலை ஏற்பட்டு, அவை மூடும் நிலை வரும். மாநில உரிமைகளை பாதுகாக்க ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்றாா் அவா்.

திமுக ஒன்றியச் செயலா் ராமசாமி, ஒன்றியக் குழுத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பிரசாரத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.