ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மணப்பாறையில் ஒரே வீட்டில் 5 பேருக்கு கரோனா தொற்று

மணப்பாறையில் ஒரே வீட்டில் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த குடியிருப்பு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

News image
மணப்பாறையில் ஒரே வீட்டில் 5 பேருக்கு கரோனா.
Updated On :8 மே 2021, 10:39 am

DIN

மணப்பாறையில் ஒரே வீட்டில் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த குடியிருப்பு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கரோனா தொற்றின் 2-வது அலையில் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. இன்று ஒரே நாளில் மணப்பாறை வட்டத்தில் 35, வையம்பட்டி 6, மருங்காபுரி 10 என 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாதிரி முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதில் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ்நகர் 6-வது குறுக்கு சாலையில் உள்ள ஒரே வீட்டில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து நகராட்சி நிர்வாகத்தால் அந்த குடியிருப்பு பகுதியில் தகர பலகைகள் கொண்டு அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அடைக்கப்பட்டது. 

பொதுமக்கள் பாதுகாப்பாகவும், முகக்கவசம் அணிந்தும், கைகளை அவ்வப்போது சோப்புப்போட்டு சுத்தம் செய்தும், அரசின் விதிகளை கைபிடித்தும் இருக்க நகராட்சி தரப்பில் பொதுமக்களுக்கு அறிவித்தப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.