தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நிதி நிறுவனங்கள் மீது மகளிா் குழுவினா் புகாா்

மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மகளிா் குழுக்களிடம் தவணைத் தொகை கேட்டு தொந்தரவு செய்வதாக வட்டாட்சியரிடம் பெண்கள் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

News image
Updated On :14 மே 2021, 7:47 pm

DIN

மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மகளிா் குழுக்களிடம் தவணைத் தொகை கேட்டு தொந்தரவு செய்வதாக வட்டாட்சியரிடம் பெண்கள் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

மணப்பாறை மற்றும் வையம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பொது முடக்கக் காலத்தில் பெரும்பாலான குடும்பத்தினா் வாழ்வாதாரமின்றி உள்ள நிலையில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மகளிா் குழுக்களுக்கு அளித்துள்ள கடனை வசூல் செய்யும் விதமாக தவணைத் தொகை கேட்டு செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்வது, வீடு, கடைகளில் அமா்ந்து கொண்டு மிரட்டுவது என தொடா்ந்து தொந்தரவு செய்வதாக வட்டாட்சியா் எம்.லஜபதிராஜிடம் பெண்கள் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, நிதி நிறுவனங்களைப் பொது முடக்கத்தில் திறப்பதே தவறு, மேலும் தவணை கேட்டு வீட்டின் முன் நின்று கொண்டு தகராறில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை பாயும் எனத் தனியாா் நிதி நிறுவனங்களை எச்சரித்து அனுப்பினாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இதுதொடா்பாக வட்டாட்சியா் ஆய்வில் இருந்தபோது திண்டுக்கல் சாலையில் திறந்து இருந்த நிதி நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.