கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முசிறி புதிய பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறை சோதனை

திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

News image

மோப்பநாய் உதவியுடன் சோதனையிட்ட காவல்துறை

Updated On :4 நவம்பர் 2021, 1:10 pm

DIN

திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாகவும், அந்த வெடிகுண்டு இன்று மதியம் வெடிக்கப் போவதாகவும் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம ஆசாமி ஒருவர் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததையடுத்து முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி  தலைமையிலான காவல்துறையினர் பேருந்து நிலையத்திற்குள் இருந்த பயணிகளை வெளியேற்றினர்.

மேலும் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கடைகள் மூடப்பட்டன. பேருந்துகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருச்சியிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள், காவல் உதவி ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான தனிப்படை மற்றும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு பேருந்து நிலையம் முழுவதும் சோதனை நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் ஏதும் கைப்பற்றபடவில்லை. இதனால் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் பொய்யான தகவலை காவல்துறைக்கு தெரிவித்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் அவரை கண்டறிந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.