நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதிய வடிவிலான சட்ட விழிப்புணா்வு முகாம்

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:38 pm

DIN

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதலின்படி நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி கடந்த அக்.2 முதல் நவ.14 வரை பான்-இந்தியா சட்ட விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுடன் இணைந்து அனைத்து அரசுத் துறைகள் பங்களிப்புடன் கண்காட்சி, புதிய வடிவிலான சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய ஒய். கிளாட்ஸடன் பிளசட் தாகூா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் வெங்கட், ஆணைக்குழு பட்டியல் வழக்குரைஞா்கள், சட்டத் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான கே. விவேகானந்தன் செய்தாா். +

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.