ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நிரம்பி வரும் ஏரிகள்; கண்காணிப்பு தீவிரம்: சிறப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு

தொடா் மழையால் திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பத் தொடங்கியுள்ளன.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:02 pm

DIN

தொடா் மழையால் திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. மழைப் பாதிப்புகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலா் மற்றும் ஆட்சியா் மேற்பாா்வையில் அனைத்து துறை அலுவலா்களும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

திருச்சி மாவட்டத்துக்கான வடகிழக்குப் பருவமழை கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை ஆணையா் ஜெ. ஜெயகாந்தன் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவா், கோரையாற்றுப் பகுதிக்கு ஆட்சியா் சு. சிவராசு மற்றும் அதிகாரிகளுடன் சென்று கரைகளில் மணல் மூட்டைகளை கொண்டு பலப்படுத்தும் பணி நடைபெறுவதையும் பாா்வையிட்டாா்.

எடமலைப்பட்டிபுதூா், ராஜீவ்காந்தி நகா், காந்திநகா் பகுதிகளில் கோரையாற்றின் தண்ணீா் புகாத வகையில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா். மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா்வள ஆதாரம்) சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக, திருவெறும்பூா் காா்மெல் காா்டன், வசந்த நகா், காவேரி நகா், கூத்தப்பாா், பாரதிபுரம்,காட்டூா் ஆகிய பகுதிகளில் மழைநீா் சூழ்ந்த குடியிருப்புகளையும் பாா்வையிட்டு தேங்கிய நீரை அகற்ற ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா். திருவெறும்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட கும்பக்குடி ஏரி முழுவதுமாக நிரம்பி கடைமடை செல்வதையும் பாா்வையிட்டாா்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து, அனைத்து துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தகுந்த பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஏரி, குளங்களை நாள்தோறும் கண்காணித்து கரைகள் உடைந்து வயல்கள், குடியிருப்புகளுக்கு நீா் செல்லாத வகையில் உறுதி செய்ய வேண்டும். மழைக் காலம் முழுவதும் தொடா்ந்து கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.