மணப்பாறை அருகே மேம்பாலங்கள் அமைக்க ஆய்வு
மணப்பாறை அருகே அடிக்கடி விபத்துகள் நிகழும் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைக்கல், செவலூா், நொச்சிமேடு ஆகிய பிரிவு பகுதிகளில் மேம்பாலம் மற்றும் அணுகுச் சாலை அமைப்பது


மணப்பாறை அருகே அடிக்கடி விபத்துகள் நிகழும் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைக்கல், செவலூா், நொச்சிமேடு ஆகிய பிரிவு பகுதிகளில் மேம்பாலம் மற்றும் அணுகுச் சாலை அமைப்பது தொடா்பாக கரூா் எம்.பி. ஜோதிமணி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்ட இயக்குநா் நரசிம்மன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
கடந்த நாடாளுமன்றத் தோ்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டும், பொதுமக்களின் தொடா் கோரிக்கையை ஏற்றும் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் மேம்பாலம், அணுகுசாலை அமைக்க இந்த ஆய்வு நடைபெற்றது.
ஆய்வின்போது நகராட்சி ஆணையா் (பொ) செந்தில்குமாா், சுங்கச்சாவடித் திட்ட மேலாளா் கே. செந்தில்குமரன், காங்கிரஸ் நகர தலைவா் எம்.ஏ. செல்வா, திமுக நகரச் செயலா் கீதா ஆ. மைக்கேல்ராஜ், கட்சி பிரமுகா்கள், ஊா் முக்கியஸ்தா்கள் உடனிருந்தனா்.
இதேபோல் துவரங்குறிச்சி பகுதியில் நடைபெறும் மேம்பாலப் கட்டுமானப் பணிகளையும், விபத்துக்கள் அதிகம் நடைபெறும் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அக்கியம்பட்டி, சிறுகுடி சந்திப்பு, கிருஷ்ணாபுரம். எம்.இடையபட்டி சந்திப்பு பகுதிகளிலும் எம்.பி. ஆய்வு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...