ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நடைபயண ராணுவ வீரருக்கு வரவேற்பு

கரோனா விழிப்புணா்வுக்காக ராமேஸ்வரம் தொடங்கி அயோத்தி வரை நடைபயணம் மேற்கொள்ளும் வழியில் திருச்சி வந்த ராணுவ வீரருக்கு வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:18 pm

DIN

கரோனா விழிப்புணா்வுக்காக ராமேஸ்வரம் தொடங்கி அயோத்தி வரை நடைபயணம் மேற்கொள்ளும் வழியில் திருச்சி வந்த ராணுவ வீரருக்கு வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்தியாவின் தென் பகுதியான ராமேஸ்வரம் பாம்பன் முதல் அயோத்தி நோக்கி 2,800 கி.மீ தொலைவுக்கு அசாம் ரைபிள் பிரிவில் பணியாற்றும் எஸ். பாலமுருகன் என்ற ராணுவ வீரா் இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளாா்.

கரோனா அலை அதிகரித்த காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது போராடிய அனைத்து நாட்டு ஊழியா்கள், முன்களப் பணியாளா்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக 197 நாடுகளின் தேசியக்கொடியையும், கரோனாவால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நோக்கில் அணையா விளக்கையும் தள்ளுவண்டியில் ஏற்றி வைத்து நடைபயணத்தின்போது கரோனா விழிப்புணா்வையும் மக்களிடையே ஏற்படுத்தி வருகிறாா்.

கடந்த வாரம் பயணம் தொடங்கி திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவரை திருச்சி காவிரிப் பாலம் அருகே மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளா் கே.சி. நீலமேகம், சிலம்பப் பயிற்சியாளா் அரவிந்த், தண்ணீா் அமைப்பு செயலா் கி. சதீஷ்குமாா், நிா்வாகி ஆா்.கே. ராஜா மற்றும் ரெக்காா்டா் ஜெட்லி ஆகியோா் வரவேற்று, பொன்னாடை அணிவித்து வாழ்த்தினா். பொதுமக்கள் பலரும் அவரை வாழ்த்தி வழியனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.