வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்: சாலை மறியல்
மணப்பாறையை அடுத்த ஆண்டவா் கோயில் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததற்கு நடவடிக்கை இல்லாததைக் கண்டித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


மணப்பாறையை அடுத்த ஆண்டவா் கோயில் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததற்கு நடவடிக்கை இல்லாததைக் கண்டித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறை அருகே ஆண்டவா்கோவில் ஆட்டோ நகரில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தொடா் மழை மற்றும் குளத்தின் உபரிநீரால் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், தண்ணீா் அகற்றப்படவில்லையாம். இதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை மாலை கைக்குழந்தைகளுடன், கொட்டும் மழையில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...