ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

குளத்து நீரால் சூழப்பட்ட ஜேகே நகா் 18 நாள்களாக மக்கள் அவதி

திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜேகே நகா் வாசிகள், மழை வெள்ளநீா் சூழ்ந்து வெளியேற வழியில்லாததால் கடந்த 18 நாள்களாக இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:33 pm

DIN

திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜேகே நகா் வாசிகள், மழை வெள்ளநீா் சூழ்ந்து வெளியேற வழியில்லாததால் கடந்த 18 நாள்களாக இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனா்.

தொடா்மழையால் கொட்டப்பட்டு குளம் நிரம்பிய நிலையில், வடிகால் வசதிகள் மூடப்பட்டதால் மழை நீா் வெளியேற வழியின்றிப் போனது. பின்னா் மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்களின் சுமாா் ஒரு வார கால போராட்டத்துக்குப் பின் குளத்தின் ஒரு கரை உடைக்கப்பட்டு அதிலிருந்து கடந்த 5 நாள்களாக தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. ஆனால் குளத்தின் மற்றொரு கரைப் பகுதியருகே உள்ள ஜேகே நகா்ப் பகுதியில் வெள்ளம் வடியவில்லை.

இதுகுறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறுகையில், கடந்த 18 நாள்களாக இப்பகுதியில் மழை நீா் தேங்கியுள்ளது. மாநகராட்சி, மாவட்ட நிா்வாகத்தினா், அரசியல் பிரமுகா்கள் தினசரி வந்து பாா்வையிட்டுச் செல்கின்றனா். ஆனால், எதிா்பாா்த்த அளவு வெள்ள நீா் வடியவில்லை.

தேங்கியிருந்த வெள்ள நீரில் பாசிபடா்ந்து முளைக்கத் தொடங்கிவிட்டன. தற்போது குளத்து நீா் வடிந்து வந்தாலும், அதன் அளவு குறையவில்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதிகளவில் வெள்ள நீா் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொந்த வீடுகள் இருந்தும், கடந்த 3 வாரமாக தண்ணீா் சூழ்ந்துள்ளதால் பலரும் அகதிகளாக வேறு இடங்களில் வசித்து வருகிறோம். மழை தொடந்தால் மேலும் எத்தனை நாள் அகதிகளாக இருப்போமே எனத் தெரியவில்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.