ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிறப்பு எஸ்ஐ கொலையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருச்சி நவல்பட்டு சிறப்பு காவல் உதவியாளா் படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கக் கோரியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:33 pm

DIN

திருச்சி நவல்பட்டு சிறப்பு காவல் உதவியாளா் படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கக் கோரியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழகம் சாா்பில் ஆட்சியரகம் எதிரே நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவரும், வழக்குரைஞருமான பொன். முருகேசன் தலைமை வகித்தாா். வீர முத்தரையா் முன்னேற்றச் சங்கத் தலைவா் கே.கே. செல்வகுமாா், சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத் தலைவி சரஸ்வதி, தமிழக தேவேந்திர குல வேளாளா் நலச் சங்க மாநில துணைச் செயலா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 70க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.