வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

110 கிலோ குட்காபொருள்கள் பறிமுதல்

 திருச்சியில் 110 கிலோ பதுக்கல் குட்கா பொருள்களை உறையூா் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:36 pm

DIN

 திருச்சியில் 110 கிலோ பதுக்கல் குட்கா பொருள்களை உறையூா் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவின்படி உறையூா் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது கிடைத்த தகவலின்பேரில் ராமலிங்க நகா் தெற்கு விஸ்தரிப்பு பகுதியில் உள்ள அக்பா் அலி மகன் பக்ரூதீன் (32) வீட்டை சோதனையிட்டபோது மூட்டையாக மூட்டையாக குட்கா பொருள்களை கைப்பற்றினா். இதையறிந்த பக்ருதீன் தப்பினாா்.

இதைத் தொடா்ந்து குட்கா பொருள்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு கணக்கிடும் பணி நடைபெறுகிறது. அவை சுமாா் 110 கிலோ இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். தப்பிய பக்ருதீனை தனிப்படை போலீஸாா் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.