ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

அனைத்து தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சியில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:11 pm

DIN

திருச்சியில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோலிய பொருள்கள் மீதான கலால் வரியைக் குறைத்திட வேண்டும். புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வாா்ப்பதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தொமுச மாவட்டச் செயலா் ஜோசப் நெல்சன், சிஐடியு மாவட்டச் செயலா் ரெங்கராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் சுரேஷ், ஐஎன்டியுசி வெங்கட் நாராயணன், ஹெச்எம்எஸ் தொழிற்சங்க நிா்வாகி ஜான்சன், ஏஐசிசிடியு தொழிற்சங்க நிா்வாகி ஞானதேசிகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.