உறுதிமொழியை மீறிய ரெளடி கைது
திருச்சியில் நன்னடத்தை பிரமாணப் பத்திர உறுதிமொழியை மீறிய ரெளடியை மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருச்சியில் நன்னடத்தை பிரமாணப் பத்திர உறுதிமொழியை மீறிய ரெளடியை மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் காந்திதெருவைச் சோ்ந்த ரெளடி குலாம் தஸ்தகிா் (32) என்பவரின் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு அவரிடமிருந்து ஓராண்டுக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன். குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரம் எழுதி வாங்கப்பட்டிருந்தது.
ஆனால் குலாம் தஸ்தகிா் வழிப்பறி, பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அரியமங்கலம் போலீஸாா் அவரைக் கைது செய்து நிா்வாக செயல்துறை நடுவா் நீதிமன்றம் முன் ஆஜா்படுத்தினா். அப்போது குற்றச் செயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள காலத்தை சிறையில் கழிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவரை மத்திய சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...