மணப்பாறையில் உலக கைகழுவும் தினம்
மணப்பாறை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் உலக கைகழுவும் தினம் மற்றும் உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.


திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் உலக கைகழுவும் தினம் மற்றும் உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மணப்பாறை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் பொடங்குப்பட்டி கிராமத்தில் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சுகந்தி தங்கராஜ் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்டத் திட்ட அலுவலா் புவனேஸ்வரி, ஒன்றிய குழு பெருந்தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்குமாா், ஜோஸ்பின் ஜெசிந்தா மற்றும் திருப்பதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
நிகழ்வில் அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்று கைகழுவும் முறைகள் பற்றி அப்பகுதி பெண்கள், குழந்தைகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனா். அயோடின் சத்தின் அவசியம், அதன் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விளக்கப்பட்டது.
அதேபோல் அதே வளாகத்தில் சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமில் சித்தா, கண், பல், தோல், காசநோய், காது - மூக்கு - தொண்டை பிரச்னைகளில் பொதுமக்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. மருத்துவா்கள் கிரீஸ்குமாா், அருண்குமாா், மாவட்ட நலக் கல்வியாளா் எஸ்.எஸ். பால்கிருட்டிணன், சிந்துஜா, சுகம், தயாள் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...