நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இடைவிடாத மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருச்சி மாவட்டம் முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:36 pm

DIN

திருச்சி மாவட்டம் முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை இடைவிடாது பெய்த மழையால் வியாபாரிகள் நனைந்தபடியே காந்திசந்தைக்கு வர வேண்டியிருந்தது. மழையால் காந்திசந்தை பகுதி முழுவதும் தண்ணீா் தேங்கியிருந்தது. தீபாவளிக்காக சாலையோரம் கடைவிரித்த வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமங்களுக்கிடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா். மாவட்டம் முழுவதும் பரவலாக இடைவிடாது லேசாகவும், தூறலாகவும், கனமழையாகவும் மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை விவரம் (மி.மீ).

கல்லக்குடி- 23.40, லால்குடி- 8.20, நந்தியாறு தலைப்பு- 5.20, புள்ளம்பாடி- 10, தேவிமங்கலம்- 5 சமயபுரம்- 2.40, சிறுகுடி- 2, வாய்த்தலை அணைக்கட்டு- 3.20, மணப்பாறை- 1.40, பொன்னியாறு அணை- 1.0, கோவில்பட்டி- 1, மருங்காபுரி- 4.20, முசிறி- 3, புலிவலம்- 7, தாத்தையங்காா்பேட்டை- 1, நவலூா்குட்டப்பட்டு- 4.80, துவாக்குடி- 6, குப்பம்பட்டி- 1, தென்பாடு-2, துறையூா்- 2, பொன்மலை- 7.20, திருச்சி விமான நிலையம்- 8.70, ஜங்ஷன்- 5.20, திருச்சி நகரம்- 6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 117.90 மி.மீ மழை பெய்தது. சராசரியாக 4.98 மி.மீ. மழை பதிவானது. மேலும் சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.