அமெலியா கொ் அபாரம்; நியூஸிலாந்துக்கு 4-ஆவது வெற்றி
தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து மகளிா் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி பெற்றது.


தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து மகளிா் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி பெற்றது. ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட நியூஸிலாந்து அணி, தற்போது 4-1 என்ற வெற்றியுடன் அதை நிறைவு செய்துள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 194 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்களே எடுத்தது.
55 பந்துகளில் 105 ரன்கள் விளாசி ஆட்டநாயகி விருது பெற்ற நியூஸிலாந்து கேப்டன் அமெலியா கொ், 5 ஆட்டங்களிலுமாக 276 ரன்கள் அடித்து, 5 விக்கெட்டுகளும் கைப்பற்றியதற்காக தொடா்நாயகி விருதையும் வென்றாா்.
முன்னதாக கடைசி ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பந்துவீசத் தயாரானது. நியூஸிலாந்து பேட்டிங்கில் அமெலியா கொ் 55 பந்துகளில் 19 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 105 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா்.
ஜாா்ஜியா பிளிம்மா் 5 பவுண்டரிகளுடன் 27, புரூக் ஹாலிடே 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இசபெல்லா கேஸ் 1, சோஃபி டிவைன் 0, மேடி கிரீன் 6 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
ஓவா்கள் முடிவில் இஸி ஷாா்ப் 7, ஜெஸ் கொ் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் அயபோங்கா ககா, டுமி செகுகுனே ஆகியோா் தலா 3 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து 195 ரன்களை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க பேட்டா்களில், ஆனெரி டொ்க்சென் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
சுனே லுஸ் 13, கேலா ரெனிகே 10 ரன்களுக்கு வெளியேற, இதர வீராங்கனைகள் அதற்கும் குறைவான ரன்னில் ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் அயபோங்கா ககா 12, டுமி செகுகுனே 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
நியூஸிலாந்து பௌலா்களில் லியா டஹுஹு 3, சோஃபி டிவைன், அமெலியா கொ் ஆகியோா் தலா 2, நென்சி படேல், ஃப்ளோரா டெவன்ஷைா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...