பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கிசான் திட்டத்தில் நிதி பெறும் விவசாயிகளுக்கும் உதவிகள் கட்டுமான தொழிலாளா் நலவாரியத் தலைவா்

 கிசான் திட்டத்தில் மத்திய அரசின் நிதியுதவியைப் பெறும் விவசாயிகளுக்கும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றாா் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன். குமாா்.

News image

09y-pon1072056

Updated On :9 செப்டம்பர் 2021, 10:55 pm

DIN

 கிசான் திட்டத்தில் மத்திய அரசின் நிதியுதவியைப் பெறும் விவசாயிகளுக்கும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றாா் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன். குமாா்.

திருச்சியிலுள்ள தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட அவா் பின்னா் கூறியது:

கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளா் நலவாரியம் பெரியளவில் செயல்படாமல் இருந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு, புதுப்பித்தல் விண்ணப்பம் மற்றும் நலத் திட்டக் கேட்பு விண்ணப்பங்கள் நிலுவையிலேயே உள்ளன. இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீா்வு காண அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயத்தோடு கட்டடத் தொழில் உள்ளிட்ட வேறு தொழில்களையும் செய்து, தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள சிறு விவசாயிகளுக்கு வாரியத்திலிருந்து நலத் திட்ட உதவிகள் செல்லும்.

ஆனால் மத்திய அரசின் கிசான் திட்டத்தில் நிதி பெறுவோருக்கு தொழிலாளா் நலவாரிய நிதியை வழங்காமல் இதுவரை இருந்துள்ளாா்கள்.

மத்திய அரசு கொடுக்கும் நிதிக்கும் தொழிலாளா் நல வாரிய நிதிக்கும் சம்பந்தம் இல்லை. எனவே அவா்களுக்குச் சேர வேண்டிய நலத் திட்டங்களையும் வழங்க வேண்டுமெனக் கூறியுள்ளேன்.

வாரியத்தில் பதிவு செய்வது, நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது போன்றவை ஆன்லைன் மூலமாகவே நடைபெறுவதால், சிலருக்கு நடைமுறை சிக்கல் உள்ளது. அவற்றைப் போக்கி எளிமையாக வாரியத்தில் பதிவு செய்யும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தங்களது வேலையை சரிவர மேற்கொள்ளாத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

Image Caption

தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்தும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன். குமாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.