என்ஐடியில் மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணி
பிட் இந்தியா திட்டத்தையொட்டி என்ஐடி வளாகத்தில் மிதிவண்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பிட் இந்தியா திட்டத்தையொட்டி என்ஐடி வளாகத்தில் மிதிவண்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய மக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள ஊக்குவிக்கும் திட்டம் (பிட் இந்தியா), இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியா அமைப்பு ஆகியவை சாா்பில் என்ஐடி வளாகத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள ஊக்குவிப்பு, பருவநிலை மாற்றம், இயற்கை பாதுகாப்பு உறுதிமொழியேற்பு, மிதிவண்டி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை என்ஐடி இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் தொடக்கி வைத்தாா். இதில், என்ஐடி டீன் குமரேசன், இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியா அமைப்பு பிரதிநிதி எஸ். நிவேதிதா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் மாணவா்கள், அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோா் 4 கிமீ தூரம் மிதிவண்டியில் சென்று சுற்றுச்சூழல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பெட்டிச் செய்தி..
சிலம்ப மாணவா்களுக்கு சான்றிதழ்
பிரதமா் மோடி பிறந்தநாளையொட்டி, பிட் இந்தியா திட்டம் சாா்பில் சிலம்பம் கற்கும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு உறையூரில் நடைபெற்றது. பாஜக உறையூா் மண்டலத் தலைவா் தா்மராஜ் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் துணைத் தலைவா் இந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் உறையூா் ஸ்ரீ செங்குளத்தான் குழுந்தளாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பக் கலைக்கூட மாணவா்கள் 112 பேருக்கு பிட் இந்தியா சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வை சிலம்ப ஆசிரியா் அ. குமரேசன் ஒருங்கிணைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...