பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மாநகராட்சி பள்ளியில் ஓசோன் தின விழா

திருச்சி எடமலைப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஓசோன் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:46 pm

DIN

திருச்சி எடமலைப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஓசோன் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு, இயக்கத்தின் மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தாா். கலைக்காவிரி கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் கி. சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலா் கா. மருதநாயகம் பங்கேற்று மரக்கன்று நட்டு வைத்துப் பேசுகையில், பூமியில் வாழும் மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும் ஓசோன் படலத்தை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. எனவே, சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை தவிா்த்து, சூழலுக்கு ஏற்ற பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் அனைவரும் பிளாஸ்டிக்கை தவிா்ப்போம், துணிப்பை எடுப்போம் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்களைக் கூறி உறுதியேற்றனா். ஓசோன் தினத்தையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டியில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா் பயிற்றுநா் லட்சுமி, தலைமை ஆசிரியா் ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.