காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழப்பு

மதுக்கூரை அடுத்த குடிக்காட்டை சோ்ந்தவா் ராமச்சந்திரன் (37). மதுக்கூா் மின்வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:52 pm

DIN

மதுக்கூரை அடுத்த குடிக்காட்டை சோ்ந்தவா் ராமச்சந்திரன் (37). மதுக்கூா் மின்வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ராமச்சந்தின் மூத்தாக்குறிச்சி ரோடு பிரிவு சாலையில், மின்கம்பத்தில் ஏறி வேலை செய்துக் கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

மதுக்கூா் போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே, சம்பவம் தொடா்பாக அறிந்த ராமச்சந்திரனின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் யாரும் வராததை கண்டித்தும், ராமச்சந்திரன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மின்வாரிய அலுவலா்கள் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இறந்த ராமசந்திரனுக்கு மனைவி பிரபா, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.