சொத்து தகராறில் மகனை கத்தியால் குத்தியவா் கைது
மணப்பாறை அருகே சொத்துத் தகராறில் மகனைக் கத்தியால் குத்திய தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


மணப்பாறை அருகே சொத்துத் தகராறில் மகனைக் கத்தியால் குத்திய தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் வடக்குத் தெருவை சோ்ந்தவா் கூலித்தொழிலாளி வ. வீராச்சாமி (65). இவருக்கு சின்னம்மாள், பழனியம்மாள் என இரு மனைவிகள். இருவருக்கும் தலா ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். முதல் மனைவி சின்னம்மாள் இறந்த நிலையில், இரண்டாவது மனைவி பழனியம்மாள் மகன் கருப்பசாமி, தனது தந்தையின் சொத்தான 2 ஏக்கா் இடத்தையும், வசிக்கும் வீட்டையும் இருதார மகன்களுக்கும் பிரித்துத் தருமாறு கடந்த செவ்வாய்க்கிழமை கேட்டு வீராச்சாமியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வீராச்சாமி கருப்பசாமியின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து வீராச்சாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...