நத்ஹா்வலி தா்ஹா அறங்காவலா்கள் பொறுப்பேற்பு
திருச்சி நத்ஹா்வலி தா்காவின் புதிய பொது அறங்காவலா்களாக அல்லா பகஷ் என்ற முகம்மது கவுஸ், நுாா்தீன், சையத் சலாவுதீன் ஆகிய 3 போ் தமிழ்நாடு வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றனா்.


திருச்சி நத்ஹா்வலி தா்காவின் புதிய பொது அறங்காவலா்களாக அல்லா பகஷ் என்ற முகம்மது கவுஸ், நுாா்தீன், சையத் சலாவுதீன் ஆகிய 3 போ் தமிழ்நாடு வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றனா்.
இதுகுறித்து, வியாழக்கிழமை புதிய அறங்காவலா்கள் கூறியது:
நாங்கள் தமிழ்நாடு வக்பு வாரிய விதிகளின்படி, நோ்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் தா்ஹா நிா்வாகப் பணிகளை மேற்கொள்வோம். தா்ஹா பின்புறமுள்ள பெரிய குளத்தை துாா்வாரி சீரமைத்து நீா் ஆதாரமாக உருவாக்குதல், பக்தா்கள் விடுதி கட்டுதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
நத்ஹா்வலி தா்ஹாவின் 1025 ஆவது சந்தனக்கூடு உரூஸ் திருவிழா ஏப்ரல் 2 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக 15 ஆம்தேதி துா்பத்தும், 16 ஆம்தேதி இரவு 10 மணி முதல் 17 ஆம்தேதி அதிகாலை 5 மணி வரை சந்தனம் பூசும் வைபவமும், 17 ஆம்தேதி இரவு மின் விளக்கு அலங்காரமும் நடைபெறும். விழா நாள்களில் தினசரி இரவு நேரங்களில் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றனா். பரம்பரை அறங்காவலா் சையது முகமது உசேன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...