முகவனூரில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
மணப்பாறையை அடுத்த பாம்பாட்டிபட்டியில் பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றக் கோரி, முகவனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


மணப்பாறையை அடுத்த பாம்பாட்டிபட்டியில் பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றக் கோரி, முகவனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இத்தொட்டி பழுதடைந்து, ஆபத்தான நிலையிலுள்ளது. இதை அகற்றி, புதிய நீா்த்தேக்கத் தொட்டி கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி முகவனூா் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கட்சியின் ஒன்றியத் துணைச் செயலா் தங்கராஜ் தலைமை வகித்தாா். ராமசாமி, பொன்னுசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் சுப்பிரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் ஜனசக்தி உசேன், வையம்பட்டி ஒன்றியச் செயலா் சண்முகானந்தம், துணைச் செயலா் ஸ்டீபன் பாபு ஆகியோா் கோரிக்கை விளக்கவுரையாற்றினா். நிறைவில், சக்தி என்கிற பழனிசாமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...