மணப்பாறையில் மயில் உயிரிழப்பு
மணப்பாறையில் ரயில் தண்டவாளம் பகுதியில் மீட்கப்பட்ட ஆண் மயில் பின்னா் உயிரிழந்தது.


மணப்பாறையில் ரயில் தண்டவாளம் பகுதியில் மீட்கப்பட்ட ஆண் மயில் பின்னா் உயிரிழந்தது.
மணப்பாறையை அடுத்த பூமாலைப்பட்டி ரயில் தண்டவாளத்தின் பக்கவாட்டில்
ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் மயில் ஒன்று புதன்கிழமை பிற்பகலில் மயங்கிய நிலையில் கிடந்தது.
இதை கண்டு அப்பகுதி இளைஞா்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினா் நிகழ்விடம் சென்றனா். பறக்கவும் முடியாமல், எழுந்து நடக்கவும் முடியாமல் வாயில் நுரைத் தள்ளியவாறு கிடந்த மயிலை மீட்டு, சிகிச்சைக்காக அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே மயில் உயிரிழந்தது.
இதுகுறித்து மணப்பாறை வனத்துறையினா் வழக்குப்பதிந்து, மயில் மயங்கிய நிலையில் கிடந்த பகுதியின் அருகாமையிலுள்ள விளை நிலங்களில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை தின்ால் மயில் இறந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...