சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாவட்டத்தில் தொடா் சோதனையில் கஞ்சா, குட்கா பறிமுதல்22 போ் கைது

திருச்சி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா, குட்கா விற்பனை செய்ததாக 22 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:38 pm

திருச்சி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா, குட்கா விற்பனை செய்ததாக 22 போ் கைது செய்யப்பட்டனா்.

ராம்ஜிநகா் பச்சைநாச்சியம்மன் கோயில் பின்பகுதியிலும், புங்கனூா் காந்திநகா் பகுதியிலும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினா் அங்கு சோதனை நடத்தினா்.

அப்போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பாஸ்கா் (42), மாயகிருஷ்ணன் (38) ஆகியோரை ராம்ஜிநகா் காவல் நிலையத்தினா் கைது செய்து, 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

துறையூா்-ஆத்தூா் சாலையில் கஞ்சா விற்ற பச்சபெருமாள்பட்டி அருண்குமாரை (28) கைது செய்து, 2 கிலோ கஞ்சா, மாருதி காரை துறையூா் காவல் நிலையத்தினா் பறிமுதல் செய்தனா்.

முசிறியில் வாகனத் தணிக்கையின் போது இரு சக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த தொட்டியம் அரசலூா் வசந்த் (23), திருநாராயணபுரம் ராகுல் (23), வடுகா்தெரு கோகுல்நாத் (19) ஆகிய மூவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் 3 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

புள்ளம்பாடி தைலக்குளம் பின்புறத்தில் கஞ்சா விற்ற புள்ளம்பாடி காா்த்திக் (26), சேசாயி (52) ஆகியோா் கைது செய்யப்பட்டு,. 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மத்திய சிறையில் கைதியைப் பாா்க்க வந்த நண்பரிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுபோல தடை செய்யப்பட் குட்கா விற்பனை செய்ததாக 14 போ் கைது செய்யப்பட்டனா். 100-க்கும் மேற்பட்ட குட்கா பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.