காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறப்பு:  50 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

காட்டுப்புத்தூர் அருகே பெரிய பள்ளிபாளையத்தில் காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறந்ததால் 50 ஏக்கருக்கு மேல் வாழைகள் சேதமடைந்துள்ளது.
காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறப்பு:  50 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்
Updated on
1 min read

திருச்சி: காட்டுப்புத்தூர் அருகே பெரிய பள்ளிபாளையத்தில் காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறந்ததால் 50 ஏக்கருக்கு மேல் வாழைகள் சேதமடைந்துள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த பெரிய பள்ளிபாளையம் கிராமத்தில் ஆற்றுப் படுகை ஓரமாக சுமார் 250 ஏக்கருக்கு மேல் வாழை பயிரிட்டு வந்த நிலையில், காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்தது. 

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரை 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடுவதால் ஆற்று படுகையோரம் உள்ள விவசாயிகள்  வேதனை அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பெரிய பள்ளிபாளையம் விவசாயி ஜெகநாதன் கூறியுள்ளதாவது: 

விவசாயிகள் தங்களது வாழைகள் ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, ஏலரிசி, செவ்வாழை, மொந்தன். நேந்திரன் ஆகிய வாழைகள் பயிரிட்டு வருகின்றனர். காவேரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் வாழை 250-க்கும் மேற்பட்ட ஏக்கர் வாழை தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. 

இதனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு பெரிய பள்ளிபாளையம், சின்ன பள்ளிபாளையம், ஸ்ரீராம் சமுத்திரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com