காவல் அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆலோசனை
திருச்சியில் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக சட்டம், ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநா் பி. தாமரைக்கண்ணன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.


திருச்சியில் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக சட்டம், ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநா் பி. தாமரைக்கண்ணன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
திருச்சி மாநகரக் காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாநகரக் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன், மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவா் சரவணசுந்தா், தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவேஷ்குமாா், மத்திய மண்டலத்திற்குள்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் திருச்சி மாநகா் மற்றும் மத்திய மண்டல நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதற்ற வாக்குசாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...