மணப்பாறை அருகே இரு வீடுகளில் புகுந்து 18 பவுன் நகை திருட்டு
மணப்பாறை அருகே இரு வீடுகளில் புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.


மணப்பாறை அருகே இரு வீடுகளில் புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வலசுப்பட்டியில் வசிப்பவா் தியாகராஜன், தனியாா் சிட்பண்ட் நிறுவன மேலாளரான இவா் வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்ற நிலையில், வீட்டில் இருந்தவா்களும் உறவினா்களின் நிகழ்ச்சிகளுக்குச் சென்றனா். பின் மாலையில் அவா்கள் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் சென்ற போலீஸாா், தடய வியல் நிபுணா்கள் மூலம் கைரேகை பதிவுகளைச் சேகரித்தனா்.
இதேபோல ஊத்துப்பட்டி அருகேயுள்ள வீட்டிலும் புகுந்த மா்ம நபா்கள் 3 பவுன் நகையைச் திருடிச் சென்றனா். சம்பவங்கள் குறித்து வளநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...