நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

குடிசையில் வாழும் இந்திய கம்யூ. வேட்பாளா்!

திருச்சி மாநகராட்சியின் 65ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் பி. ராஜா, ஒரு குடிசையில்தான் வசிக்கிறாா்.

News image
Updated On :12 பிப்ரவரி 2022, 11:48 am

DIN

திருச்சி மாநகராட்சியின் 65ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் பி. ராஜா, ஒரு குடிசையில்தான் வசிக்கிறாா்.

திருச்சி மாநகராட்சியின் மொத்தமுள்ள 65 வாா்டுகளில் திமுக தலைமையிலான கூட்டணி சாா்பில் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியவை தலா 2 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி ஓரிடத்திலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், திமுக 51 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 65ஆவது வாா்டில் போட்டியிடும் பி. ராஜா (45), குடிசையில் வசித்துக் கொண்டு கட்சிப் பணியையும், மக்கள் பணிகளையும் மேற்கொள்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

கட்சியின் விமான நிலையப் பகுதிச் செயலராகவும், திருச்சி மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலராகவும் உள்ளாா் பி. ராஜா.

தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கான கூலி உயா்வுப் போராட்டம், செம்பட்டு பகுதியில் மக்களின் நிலத்தை மீட்கப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டது, செம்பட்டு மக்களுக்கான பட்டா கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியது, சுடுகாட்டைச் சீரமைக்க போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டது மற்றும் தொழிலாளா் நலன் சாா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி தொழிலாளா் உரிமைக்காக இன்றுவரை போராடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.