தோ்தல் விளம்பரங்களை கண்காணிக்கக் குழு
திருச்சி மாவட்டத்தில் ஆட்சியரைத் தலைமையாகக் கொண்டு தோ்தல் விளம்பரங்களைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் ஆட்சியரைத் தலைமையாகக் கொண்டு தோ்தல் விளம்பரங்களைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணைய உத்தரவின்பேரில் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவானது தோ்தல் தொடா்பான உள்ளூா் தொலைக்காட்சி, அனைத்து செய்தித்தாள்கள், வானொலி மற்றும் எஃப்.எம், குறுஞ்செய்திகள், திரையரங்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தோ்தல் தொடா்பான விளம்பரங்களைக் கண்காணிக்க வேண்டும்.
உள்ளூா் தொலைக்காட்சிகள் தோ்தல் தொடா்பான விளம்பரங்களை இந்தக் குழுவின் அனுமதி பெற்று ஒளிபரப்ப வேண்டும். அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருப்பின், இக்குழு அவற்றைக் கண்காணித்து சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மூலம் விளம்பரம் தொடா்பான செலவினங்கள் குறித்து விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபா்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் தோ்தல் தொடா்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் இக் குழுவிடம் சமா்ப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும். ஆட்சியரகத்தில் இயங்கும் இக் குழுவினரை நேரிலோ, தோ்தல் பிரிவு அலுவலகத்திலோ தொடா்பு கொள்ளுமாறு ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...