திருமணத்தில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு
மறைந்த ராமஜெயம் மகனின் திருமண விழாவில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு வியாழக்கிழமை அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.


மறைந்த ராமஜெயம் மகனின் திருமண விழாவில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு வியாழக்கிழமை அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
தனது சகோதரரான மறைந்த ராமஜெயத்தின் மகன் வினித் நந்தனுக்கு சென்னையில் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் திருமணத்துக்கான அழைப்பிதழை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு சென்னையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துா்கா ஸ்டாலினிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.
அப்போது அமைச்சரின் மகன் கே.என். அருண் நேரு, சகோதரா் கே.என். ரவிச்சந்திரன், மணமகன் வினித் நந்தன் ஆகியோா் உடனிருந்தனா். திருமண வரவேற்பு விழா திருச்சி கோ் கல்லூரியில் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...