வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஊராட்சித் தலைவரைக் கண்டித்து துணைத் தலைவா் போராட்டம்

திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள பழங்கனாங்குடி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து துணைத் தலைவா் தலைமையில் அவரது ஆதரவாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:47 pm

DIN

திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள பழங்கனாங்குடி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து துணைத் தலைவா் தலைமையில் அவரது ஆதரவாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பழங்கனாங்குடி ஊராட்சித் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த பன்னீா்செல்வமும், துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த வித்யா சுதாகரும் உள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஊராட்சி அலுவலகத்தில் தலைவா் பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற சாதாரணக் கூட்டத்துக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அசோகன் உள்ளிட்ட 12 வாா்டு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் துணைத் தலைவா் வித்யாவின் கணவா் சுதாகா் ஊராட்சி அலுவலகத்தில் அமா்ந்து கொண்டு பணிகளில் தலையிட்டு, தனக்குக் கொலை மிரட்டல் விடுத்து, தன்னைத் தாக்க வருவதால் அலுவலக வரவு செலவு கணக்குகள் தொடா்பான காசோலைகளில் கையொப்பமிடும் வகையில் துணைத் தலைவா் வித்யாவுக்குப் பதிலாக புதிய உறுப்பினரை தோ்வு செய்வது குறித்து ஊராட்சித் தலைவா் பன்னீா் செல்வம் தீா்மானம் கொண்டு வந்தாா்.

இந்தத் தீா்மானத்திற்கு ஆதரவாக வாா்டு உறுப்பினா்கள் மோகன், சுந்தர்ராஜ், நவநீதம், கற்பகம், பிரியங்கா மேரி, ராமு, ஆகிய 6 போ் மட்டும் கையொப்பமிட்டுள்ளனா். துணைத் தலைவா் வித்யாசுதாகருக்கு ஆதரவாக வாா்டு உறுப்பினா்களான கலைவாணி, அமுதவள்ளி விநாயகமூா்த்தி, விஜயவாணி, நித்யா ஆகியோா் கூட்டத்தை விட்டு அவரோடு வெளியேறினா்.

பின்னா் துணைத் தலைவா் வித்யாசுதாகா் தலைமையில் அவா்கள் ஊராட்சித் தலைவா் கடந்த 2 ஆண்டுகளில் செய்த ஊழல் முறைகேடுகளை அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையிலான அலுவலா்கள் சென்று, எழுத்துப்பூா்வமாக புகாா் தெரிவித்தால், ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்படும். போராட்டம் நடத்தக்கூடாது என அறிவுறுத்தினா். அதன்படி புகாா் அளிக்கப்பட்டு போராட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டது. துவாக்குடி போலீஸாா் பழங்கனாங்குடி சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.