விமானத்தில் கோளாறு: 120 பேரின் இலங்கை பயணம் ஒத்திவைப்பு
திருச்சியிலிருந்து இலங்கை செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் அதில் இருந்த 120 பேரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


திருச்சியிலிருந்து இலங்கை செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் அதில் இருந்த 120 பேரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து வியாழக்கிழமை காலை சுமாா் 9.10-க்கு திருச்சி வந்த ஏா்லங்கா விமானம், பயணிகளை இறக்கிவிட்டு, 120 பயணிகளுடன் மீண்டும் காலை 10.10-க்கு இலங்கைக்கு புறப்பட்டபோது விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டது விமானிக்குத் தெரியவந்து, விமானம் நிறுத்தப்பட்டது.
பின்னா் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு தனியாா் விடுதியில் தங்க வைக்கப்பட்டனா். விமானத்தை சரிசெய்யும் முயற்சி பலனளிக்கவில்லை. எனவே வெள்ளிக்கிழமை இலங்கையிலிருந்து மாற்று விமானத்தில் தொழில்நுட்ப வல்லுநா்கள் வரவழைக்கப்பட்டு கோளாறு சரிசெய்யப்பட்டு, அதே விமானத்தில் பயணிகள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...