வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

‘முக்கொம்பு புதிய கதவணைப் பணி மே மாதம் முடியும்’

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் நடைபெறும் புதிய கதவணை கட்டுமானப் பணிகள் 92 சதம் முடிந்துள்ளன. மீதிப் பணிகள் மே மாதத்துக்குள் முடியும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:48 pm

DIN

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் நடைபெறும் புதிய கதவணை கட்டுமானப் பணிகள் 92 சதம் முடிந்துள்ளன. மீதிப் பணிகள் மே மாதத்துக்குள் முடியும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

முக்கொம்பு கதவணைப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மேலும் கூறியது:

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பழைய கதவணைக்கு கீழ்புறம் தெற்கு கொள்ளிடத்தில் 628 மீட்டரில் 45 மதகுகள், வடக்கு கொள்ளிடத்தில் 138 மீட்டரில் 10 மதகுகள் என மொத்தம் 766 மீட்டரில் 55 மதகுகள் அமைக்கப்படுகின்றன. இந்தக் கதவணையில் போக்குவரத்துக்கு ஒருவழிச் சாலையும் அமைக்கப்படுகிறது. மொத்தமுள்ள 484 பைல்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1688 மீட்டா் நீள கசிவில்லா சுவா் முழுவதும் கட்டப்பட்டுள்ளது. 1532 மீட்டா் நீள குறுக்கு வெட்டுச் சுவரில் 1467 மீட்டரில் பணிகள் முடிந்துள்ளன. அணையின் மேல் மற்றும் கீழ்புறத்தில் தேவையான 7,800 கான்கிரீட் பிளாக்குகளில் 7,320 பிளாக்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 55 மதகுகளில் அடித்தளப் பணிகள் முடிந்துள்ளன.

ஒருவழிப் பாலம் 766 மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. 55 மதகுகளின் மூடு பலகைகள் முழுவதும் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 53 மூடுபலகைகள் பொருத்தப்பட்டுவிட்டன. முக்கொம்பு முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை உள்ள நடுக்கரையைப் பலப்படுத்தும் பணி மற்றும் இதர பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை மே மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரப் பிரிவுப் பொறியாளா்கள், பணிகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.