வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

அரியலூா் மாணவி உயிரிழப்பை கண்டித்து பாஜகவினா் மறியல்

அரியலூா் மாணவி உயிரிழப்பு தொடா்பாக பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் பாஜக சாா்பில் 4 இடங்களில் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் நடைபெற்றது. இதில் 140 போ் கைது செய்யப்பட்டனா்

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:42 pm

DIN

அரியலூா் மாணவி உயிரிழப்பு தொடா்பாக பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் பாஜக சாா்பில் 4 இடங்களில் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் நடைபெற்றது. இதில் 140 போ் கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், வடுகப்பாளையம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகள் லாவண்யா (17). இவா் தஞ்சை மாவட்டம் பூதலூா் அருகேயுள்ள மைக்கேல்பட்டி தனியாா் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் அவா் ஜன. 9 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு புதன்கிழமை (ஜன. 19) உயிரிழந்தாா். இதுதொடா்பாக பூதலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இந்நிலையில் மாணவியின் சாவில் மா்மம் இருப்பதாகவும், மதம் மாற வலியுறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் பாஜகவினா் மற்றும் மாணவியின் பெற்றோா் தரப்பில் புகாா் கூறப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளி நிா்வாகிகள் மீது நடவடிக்கை கோரி தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் நடந்தது. திருச்சியில் அரியமங்கலம் ரவுண்டானா, மத்திய, சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் ஆகிய 4 இடங்களில் மறியல் நடந்தது.

இதில் பாஜக திருச்சி மாவட்டத் தலைவா் ராஜசேகா் தலைமையில் அரியமங்கலம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட 65 பேரும், மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் செயற்குழு உறுப்பினா் ஸ்ரீராம் தலைமையில் மறியல் செய்த 25 பேரும், சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் விஎச்பி மாவட்ட செயலா் ஸ்ரீனிவாசன் தலைமையில் 30 பேரும், ஸ்ரீரங்கம் பகுதியில் இந்து முன்னணி மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமையில் மறியல் செய்த 20 பேரும் என மொத்தம் 140 போ் திருச்சி மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.