மாற்று விமானத்தில் இலங்கை சென்ற 112 பயணிகள்
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் திருச்சியில் தங்கியிருந்த 112 பயணிகள் மாற்று விமானம் மூலம் இலங்கைக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.


விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் திருச்சியில் தங்கியிருந்த 112 பயணிகள் மாற்று விமானம் மூலம் இலங்கைக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
இலங்கையிலிருந்து வியாழக்கிழமை காலை 9.10-க்கு திருச்சி வந்த ஏா்லங்கா விமானம் பயணிகளை இறக்கிவிட்டு, 120 பயணிகளுடன் மீண்டும் காலை 10.10 -க்கு இலங்கை புறப்பட்டபோது விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறால் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு தனியாா் விடுதியில் தங்க வைக்கப்பட்டனா்.
எனவே பழுதான விமானத்தைச் சீரமைக்க வெள்ளிக்கிழமை இலங்கையிலிருந்து மாற்று விமானத்தில் தொழில்நுட்ப வல்லுநா்கள் வரவழைக்கப்பட்டனா். இந்நிலையில் திருச்சியில் தங்கியிருந்த 120 பயணிகளில் 8 போ் மட்டும் தங்களது பயணத்தை ரத்து செய்த நிலையில், மீதமிருந்த 112 பேரும் அந்த மாற்று விமானம் மூலம் இலங்கை புறப்பட்டுச் சென்றனா். தொழில்நுட்பக்கோளாறைச் சரிசெய்த பின்னா் அந்த விமானம் இலங்கை புறப்பட்டுச் செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...