ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஆதித்தமிழா் பேரவை ஆா்ப்பாட்டம்

 மாவட்ட ஆட்சியரகம் அருகே திருச்சி மாவட்ட ஆதித்தமிழா் பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:34 pm

DIN

 மாவட்ட ஆட்சியரகம் அருகே திருச்சி மாவட்ட ஆதித்தமிழா் பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரவையின் மாவட்டச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். சோழன், மோகன்ராஜ், ரவி, அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டம், வீரலூா் கிராமத்தில் கடந்த பொங்கல் தினத்தன்று இறந்த எங்கள் சமுதாயப் பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய பொதுப்பாதையில் செல்ல முயன்றபோது, குறிப்பிட்ட சமுதாயத்தினா் எங்களைத் தடுத்து நிறுத்தி தகராறு செய்து தாக்கியதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

எனவே எங்கள் இன மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் எங்கள் சமுதாய மக்களைத் தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் இத்தகைய போராட்டங்கள் தொடரும் எனத் தெரிவித்தனா். போராட்டத்தில் சுமாா் 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.