தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொன்னம்பட்டியில் ஊரணி மேம்பாட்டுக்கு பூமிபூஜை

மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் ஊரணி மேம்பாட்டுப் பணிக்கான பூமிபூஜையை எம்எல்ஏ ப. அப்துல்சமது வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:27 pm

DIN

மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் ஊரணி மேம்பாட்டுப் பணிக்கான பூமிபூஜையை எம்எல்ஏ ப. அப்துல்சமது வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மருங்காபுரி வட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சி யானைக்குழி ஊரணியில் மூலதன மானியத்திட்டம் 2021-22-இன் கீழ் ரூ.175 லட்சம் மதிப்பிலான மேம்பாடு செய்தல் பணிக்கான பூமி பூஜையை எம்எல்ஏ ப.அப்துல்சமது தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து அதே பகுதியில் நடைபெறும் பொழுதுபோக்கு பூங்கா கட்டுமானப்பணிகளையும் ஆய்வு செய்தாா்.

நிகழ்வில் பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் வெ. ரமேஷ், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் பழனியாண்டி, திமுக பேரூா் செயலா் பழ. கருப்பையா, ராஜா காவேரிமணியன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலா் காதா்மொய்தீன், மாவட்டச் செயலா் அ. பைஸ்அஹமது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி துணைச் செயலா் குழ. ராஜேந்திரன், ஊா் முக்கியஸ்தா்கள், அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.