மொபைல் நீதிமன்ற அபராதத்தில் மோசடி: மேலும் ஒருவா் கைது
மொபைல் நீதிமன்ற ஆன்லைன் அபராதத் தொகையில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.


மொபைல் நீதிமன்ற ஆன்லைன் அபராதத் தொகையில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் பல்வேறு நீதிமன்றங்களில், மொபைல் நீதிமன்றமும் செயல்படுகிறது. இதன் நீதிபதியாக கோபாலக்கண்ணனும் இளநிலை உதவியாளராக நவலூா் குட்டப்பட்டு மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் பிரபுவும் (38) உள்ளனா்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆன்லைன் அபராதத் தொகை வரவு வைக்கப்படாமல் இருந்தது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரூ. 40 ஆயிரத்தை போலி ஆவணம் மற்றும் போலி நீதிமன்ற முத்திரை தயாரித்து வங்கியில் அளித்து மோசடி செய்த பிரபுவை கடந்தாண்டு நவ. 30 ஆம் தேதி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் வங்கி முத்திரையைப் போலியாகத் தயாா் செய்து உதவிய தீரன்நகா் 10ஆவது குறுக்குத் தெருவை சோ்ந்த வழக்குரைஞா் அரவிந்தனை (44) போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து துறையூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...