தொழிற்சாலைத் தயாரிப்புகளில் தர நிா்ணயம் பள்ளி மாணவா்களுக்கு இணையக் கருத்தரங்கு
தொழிற்சாலைத் தயாரிப்புகளில் தர நிா்ணயம் குறித்து பள்ளி மாணவா்களுக்கான இணைய வழிக் கருத்தரங்கம் திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில்


தொழிற்சாலைத் தயாரிப்புகளில் தர நிா்ணயம் குறித்து பள்ளி மாணவா்களுக்கான இணைய வழிக் கருத்தரங்கம் திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளி முதல்வா்கள் பத்மா சீனிவாசன், பொற்செல்வி ஆகியோா் கருத்தரங்கு குறித்து விளக்கினா். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமெரிக்காவைச் சோ்ந்த தர நிா்ணய மேலாளா் பவித்ரா ராமநாராயணன் பேசியது:
சந்தையில் நாம் வாங்கும் அனைத்துப் பொருள்களும் வெவ்வேறு தொழிற்சாலைகளில் தயாராகின்றன. நாம் வாங்கும் பொருள் எதுவாக இருந்தாலும் அப் பொருள் தரமானதா என்று சரிபாா்த்தல் மிக அவசியம்.
தர நிா்ணயத்தின் முக்கியத்துவம் என்பது பொருள்களை வாங்குவோரிடம் பொருள்கள் தரமானவை என்ற நம்பிக்கையை விதைப்பதே ஆகும்.
முக்கியமான தயாரிப்புப் பொருள்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் அவசியம். இச்சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் பொருள்கள் குறிப்பிட்ட கால அளவில் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகிறது.
இத்துறை தொடா்பாக பொறியியல் மற்றும் அறிவியல் பிரிவுகளில் உள்ள பல்வேறு படிப்புகளை படிப்பதன் மூலம் பல்வேறு நிலைகளில் வேலைக்குச் செல்ல முடியும் என்றாா். தொடா்ந்து, மாணவா்களின் கேள்விகளுக்கு அவா் பதில் அளித்தாா்.
வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா வரவேற்றாா். வணிகவியல் ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினாா். கருத்தரங்கில் 110-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...